பெரியார் வேடமிட்ட குழந்தையை அச்சுறுத்தும் வகையில் வன்முறை நிறைந்த கருத்துக்களை பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் பெரியாரின் வரலாற்றை சித்தரிக்கும் விதமாக குழந்தைகள் பங்கேற்ற நாடகம் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் பெரியார் வேடமிட்ட குழந்தை பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் அந்த நாடகத்தில் பங்கேற்ற குழந்தைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார.
தற்போது அந்த நிகழ்ச்சி குறித்து கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் பாபு என்பவர் பெரியார் வேடமிட்ட குழந்தையை அச்சுறுத்தும் வகையில் வன்முறை நிறைந்த கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து வன்முறை கருத்துகளை பதிவிட்ட வெங்கடேஷ் பாபுவை கைது செய்து காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.