ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹேமானந்தா பிஸ்வால் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். 1974 முதல் காங்கிரஸ் கட்சி சார்பாக 6 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசா மாநில முதல்வராக டிசம்பர் 7, 1989 முதல் மார்ச் 5, 1990 வரை & டிசம்பர் 6, 1999 முதல் மார்ச் 5, 2000 வரை என 2 முறை பதவி வகித்துள்ளார். ஒடிசாவின் முதல் பழங்குடியின முதல்வர் இவர்தான்.
இந்நிலையில் ஒடிசாவின் முன்னாள் முதல்வர் ஹேமானந்தா பிஸ்வாலின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரச் செய்தி தனக்கு வேதனை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 83 வயதான ஹேமானந்தா பிஸ்வால், காங்கிரஸ் கட்சி சார்பாக 6 முறை ஒடிசா மாநில சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்..