Categories
சினிமா செய்திகள்

அஜித்தின் வலிமை…. “என்னாது முதலில் இவர் வில்லனாக நடிக்க இருந்தாரா”…. யாருன்னு தெரியுமா?….!!!!

வலிமை திரைப்படத்தில் முதலில் பிரசன்னா நடிகை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். வலிமை திரைப்படமானது இரண்டு ஆண்டுகளாக உருவாகிக் கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியானது. இத்திரைப்படத்தை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வந்தாலும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றது. இத்திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்திருக்கிறார். தற்போது இவருக்கு முன் பிரசன்னா நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம்வரும் பிரசன்னா ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வருகின்றார். வலிமை படக்குழு வில்லனாக நடிக்க பிரசன்னாவை முதலில் அணுகியது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |