இயக்குனர் எச்.வினோத்துக்கு வலிமை படத்தினால் சில மன வருத்தங்கள் ஏற்பட்டு உள்ளதாக பேசப்படுகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கும் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் வலிமை திரைப்பட ரிலீஸானது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்துடன் சேர்ந்த கொண்டாட்டமாக அமைந்தது. இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் மற்றும் வினோத் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படமானது நேற்று முன்தினம் வெளியாகியது. ரசிகர்களுக்கு இப்படம் பிடித்திருந்தாலும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனர் வினோத் படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்ளாததால் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கின்றது.
தீரன், சதுரங்க வேட்டை, நேர்கொண்டபார்வை உள்ளிட்ட படங்களின் பிரமோஷனுக்காக இயக்குனர் வினோத் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஆனால் வலிமை திரைப்படத்தின் பிரமோஷனுக்காக தீவிரமாக செயல்படவில்லை. ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் சிலவற்றில் மட்டுமே கலந்து கொண்டிருக்கின்றார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுதும் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார். வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது வினோத்தின் சுதந்திரங்கள் பல பறிக்கப்பட்டதாகவும் அவருக்கு தெரியாமல் படத்தில் பல மாற்றங்கள் செய்துள்ளதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இதனால்தான் வலிமை படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்ளாமல் இருந்தாராம் என கூறப்படுகின்றது. மேலும் போனி கபூரின் வற்புறுத்தலால் மட்டுமே சில புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளாராம். இந்நிலையில் அஜீத்-வினோத் கூட்டணி தல 61-ல் நிலைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ரசிகர்கள் இதெல்லாம் ஒரு வதந்தியே. இவர்களுக்குள் எந்த ஒரு முரண்பாடும் இருக்காது என சிலர் கூறி வருகின்றனர்.