வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வோர் தமிழகத்தில் ஓராண்டு internship பயிற்சி பெற வேண்டும் என்பது விதியாகும். இதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.3,54,000 லிருந்து ரூ.29,400-ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.