திண்டுக்கல் மாவட்ட அரசு ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அரசு தலைமையில் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், இதனால் ஏராளமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்திலும் இடைவிடாது பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு ,14 நாட்கள் வரை தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனை தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் ஒன்று பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது. இம்முகாம் மொத்தம் 37 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, மக்களுக்கு ஆற்றும் சேவை என்பதை உணர்ந்து அரசு பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் மக்களிடமிருந்து பெறும் கோரிக்கை மனுக்களை சட்டத்துக்கு உட்பட்டு விரைவாக முடித்துக் கொடுக்க வேண்டும். மேலும் நேர்மையான முறைகளில் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.