இந்தியாவில் ஆதார் கார்டு என்பது அனைவருக்கும் முக்கியமான ஆவணமாகும். மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அட்டை அவசியம். இந்த ஆதார் அட்டையில் பல நேரங்களில் பெயர், முகவரி, பிறந்த தேதியை மாற்ற வேண்டும் அல்லது புதிய ஆதார் அட்டையைப் பெற வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். இதுபோன்ற ஆதார் அப்டேட்களுக்கு நீங்கள் ஆதார் மையத்திற்குச செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இப்போது வீட்டில் உட்கார்ந்தே ஒரு அப்பாயிண்ட்மெண்டை பதிவு செய்யலாம். இதன் மூலம் சேவை மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவை இல்லை. எதை எல்லாம் அப்டேட் செய்யலாம் என்றால் புதிய ஆதார் என்ரோல்மெண்ட், பெயர் அப்டேட், முகவரி அப்டேட், மொபைல் நம்பர் அப்டேட், மின்னஞ்சல் ஐடி அப்டேட்,பிறந்த தேதி அப்டேட், பாலினம் அப்டேட்
பயோமெட்ரிக் அப்டேட் இவைகளை செய்யலாம். மேலும் ஆன்லைன் மூலமாக ஆதார் அப்டேட்டுக்கான அப்பாயிண்ட்மெண்டை https://uidai.gov.in என்ற வெப்சைட்டில் பெறலாம்.