டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வானது முதன்மை தேர்வு மற்றும் முதல் நிலை தேர்வு என்று நடத்தப்படுகின்றது. அதில் முதல் பிரிவில் 100 வினாக்கள் தமிழ் மொழி பாடங்களில் இருந்தும், 75 வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்தும், அடுத்த 25 வினாக்கள் கணித பகுதியில் இருந்தும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதுகுறித்த முழு விவரங்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான தலைப்புகள் (விரிவான எழுத்து தேர்வு) :-
* தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
* ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
* பொருள் உணர்திறன்
* சுருக்கி வரைதல்
* கடிதம் வரைதல்
* தமிழ் மொழியறிவு
* திருக்குறள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்
தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் :-
* சமுதாயப் பிரச்சனைகள்
* சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்
* தற்கால நிகழ்வுகள்
* அறிவியலும் தொழில்நுட்பமும்
* இந்திய பொருளாதாரம் தொடர்பான தலைப்புகள்
* இக்காலத் தமிழ்மொழி – கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்
* கலையும் பண்பாடும்
* பகுத்தறிவு இயக்கங்கள் – திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்
* சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக, பொருள் வேறுபாடு அறிதல், பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம், பிழை நீக்கி எழுதுக
* திருக்குறள் தொடர்பாக கீழ்காணும் தலைப்புகளில் கட்டுரை எழுதுதல்.
* தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு – இடஒதுக்கீடும் அதன் பயன்களும், தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு.