Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் இனி…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்சியல் தமிழில் எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது அரசு ஆவணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெயர் எழுதுபவர்கள் இனிசியலை தமிழில் எழுத வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி தமிழகத்தில் அரசு ஆவணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெயர் எழுதுபவர்கள் தங்களுடைய பெயரின் முன்னெழுத்தை தமிழில் எழுத வேண்டும். அதாவது இன்சியல் எழுதும்போது தமிழில் எழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள், அனைத்து அலுவலக பணியாளர்களும் தமிழிலேயே கையெழுத்து போட வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழில் இன்சியல் எழுதவேண்டும். தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் துறைசார்ந்த அலுவலகங்களிலும் இந்த நடைமுறைகளை தவறாது நடைமுறைப்படுத்தி ஆட்சிமொழி செயலாக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |