அஜித்தின் வலிமை திரைப்படமானது சிங்கப்பூர், மலேசியாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். அஜித் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வலிமை படம் ரிலீசாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரும் வலிமை படக்குழுவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகி இருக்கின்றது. வலிமை திரைப்படம் விடுமுறை இல்லாத நாளில் வெளியாகிய நிலையில் மற்ற திரைப்படங்களின் கலெக்சன்களைவிட இப்படத்தின் வசூல் அதிகமாக இருக்கின்றது. மற்ற படங்களின் கலெக்ஷன் சாதனைகளை முறியடித்து முதல் நாளில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூலை பெற வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் வலிமை திரைப்படமானது முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.