உக்ரேனில் இருந்து வந்த தமிழக மாணவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் விசுவா. இவர் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விசுவா கடந்த 18 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் இந்திய தூதரகம் இந்தியா செல்ல விரும்பும் மாணவர்கள் செல்லலாம் என அறிவித்தது.
இதனையடுத்து விசுவா உள்ளிட்ட சில மாணவர்கள் கடந்த 18ஆம் தேதி ஏர் அரேபியா விமானம் மூலம் சார்ஜா வந்தனர். அதன் பின்னர் இணைப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தடைந்தனர். இந்நிலையில் இவர் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் என்னுடன் கல்லூரியில் படிக்கும் வேலூர், விழுப்புரத்தை சேர்ந்த 6 மாணவர்கள் 50 ஆயிரம் ரூபாய் விமான கட்டணம் செலுத்தி வந்துவிட்டோம். மேலும் எங்கள் கல்லூரியில் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் படிக்கின்றனர் .
இந்நிலையில் எங்கள் கல்லூரியின் அருகே ஏராளமான போர் விமானங்கள் பறந்து செல்வதாக அங்குள்ள என்னுடைய நண்பர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சாலைகளில் பீரங்கிகளுடன் வாகனங்கள் ஏராளமான செல்கின்றனர். இதனால் அவர்கள் பெரும் பதற்றத்துடன் இருக்கின்றனர். எனவே அவர்களை அழைத்துவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.