அரசு பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய 3 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்திலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் அரசு பேருந்தின் மீது கல்லை வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். இதில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக 3 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.