Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா விவகாரம்; என் பதவிக்காலத்தில் சோகமான தருணம்…. ஐநா பொதுச்செயலாளர் வேதனை…!!

உக்ரைன் போர் விவகாரம்  என் பதவிக்காலத்தில் சோகமான தருணம் என ஐ.நா சபை பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். 

உக்ரைன்  மீது ரஷ்யா போர் தொடுப்பதை  தடுப்பது  தொடர்பாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உடனடியாக அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ரஷ்யா அதிபர் புதின் போர் நடவடிக்கை அறிவித்தார்.  அமெரிக்க தூதர்  லிண்டா தாமஸ் கிரீன்பீல்டு  பேசுகையில், “நான் சமாதானத்தை கூறி இந்த கவுன்சிலிங் கூடி  இருக்கின்ற நேரத்தில் இந்த கவுன்சிலிங் பொறுப்பை முற்றிலும் புறக்கணித்து விட்டு அதிபர் போர்  செய்தியை அறிவித்திருக்கிறார்.  இது மிக மிக கடுமையான நெருக்கடி மேலும் இந்த கவுன்சில் செயல்பட வேண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என கூறினார்.

இங்கிலாந்து தூதர் பார்பாரா உட்வர்ட் பேசும் போது, நாம் இந்த அறையில்  அமர்ந்து கொண்டு போர் முடிவில் இருந்து ரஷ்யா பின் வாங்க வேண்டுமென சொல்கிற தருணத்தில் அவர் தாக்குதலை தற்போது அறிவித்துள்ளார். இது தூண்டப்படாத மற்றும்  நியாயப்படுத்த முடியாத நடவடிக்கையாகும். இங்கிலாந்தும் பங்காளி நாடுகளும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு என் உதவியாக இருக்கும் என்பதில் தீர்மானமாக இருக்கின்றனர். மேலும் அமெரிக்காவின் அழைப்பை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். போரை நிறுத்தவும் ஐ.நா சாசனத்தில் நிலைநிறுத்தவும் இந்த கவுன்சிலின் தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

அதன்பின் பிரான்ஸ் தூதர் நிக்கோலஸ்டி ரிவியர்  ஆவேசமாக பேசினார். இந்த கவுன்சிலிங் கூடிய தருணத்தில் அறிவிக்கப்பட்ட போர் முடிவு சர்வதேச சட்டத்தையும் ஐ.நா சபையும் ரஷ்யா அவமதிப்பதை காட்டுகிறது. பாதுகாப்பு கவுன்சிலின் முன்பாக அரசே பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு வீட்டில் வெளியே வந்த ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரேஸ் நிருபர்களிடம் பேசினார். அப்போது ஐ.நா சபையின் பொதுச் செயலாளராக நான் பதவி வகிக்கும் காலத்தில் இது மிகவும் சோகமான தருணம் என்பேன். நான் இந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் புதினை நோக்கி எனது இதயத்தின் ஆழத்திலிருந்து கூறுகிறேன். உக்ரைன்  மீதான படையெடுப்பில் உங்கள் படைகளை நிறுத்துங்கள் ஏனெனில் ஏராளமானவர்கள்  இறந்திருக்கிறார்கள்.  சமாதானத்திற்காக ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்டுக் கொண்டேன். ஆனால் அதில் ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கையாக அதிபர் புதின் அறிவித்துவிட்டார்.

இந்தப் போரின் விளைவுகள் உக்ரேனில்  மட்டுமல்லாமல் ரஸ்யாவுக்கு  மட்டுமல்ல முழு உலகத்துக்கும் பேரழிவை ஏற்படுத்தி விடும். கொரோனா தொற்றிலிருந்து  வெளிவருகிற இந்த தருணத்தில் போரினால் உலக பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை நாம் முன்கூட்டியே கணிக்க முடியாது. இது மிகமிகக் கடினமானது. எண்ணெய் விலை ஏற்றம், உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி நிறுத்தம், சர்வதேச சந்தைகளில் உறுதியற்ற தன்மைகளால் ஏற்படும் வட்டி விகிதங்கள் மாற்றம் ஆகியவை மிக கடினமானதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |