Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“விறகு சேகரிக்க கூடாது ” அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

வனப்பகுதிக்குள் பொதுமக்கள் விறகு எடுக்க செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் காட்டுயானைகள் மற்றும் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது கோடைக்காலம் நெருங்கி வருவதால் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக தேயிலை தோட்ட பகுதிக்குள் வருகின்றன.

இந்நிலையில் காட்டுயானைகள் ஒன்று சேர்ந்து வால்பாறை வழியாக கேரள வனப்பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர்காக கேரள  வனப்பகுதிக்கு செல்ல நேரிடும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் விறகு சேகரிப்பதற்காக வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதை மீறினால் உயிர் சேதம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |