Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மஞ்சள் நீர் ஊற்றும் விழா” அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்…. கலந்து கொண்ட பக்தர்கள்…!!

கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றும் விழா நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாதத்தை முன்னிட்டு தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த  பிப் 15-ம் தேதி திருவிழா தொடங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு முன்பாக பிப் 22-ம் தேதி மஞ்சள் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த மஞ்சள் கம்பத்திற்கு பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து மஞ்சள் நீரை எடுத்து வந்து ஊற்றுகின்றனர். மேலும் மார்ச் மாதம் 14-ஆம் தேதி வரை தேர் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் போன்றவைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  தேர் திருவிழா நடைபெறுவதற்கு முன்பாக பக்தர்கள் பூவோடு ஏந்தி கோவிலுக்கு வருவார்கள். இதனையடுத்து  கொடி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு  மாவிளக்கு எடுத்தல், திருக்கல்யாண வைபவம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கிறது. அதன்பிறகு அம்மனுக்கு 3 நாட்கள் தொடர்ந்து வெள்ளித் தேரோட்டம் நடைபெறவிருக்கிறது. இதன்பிறகு அம்மன் நிலைக்கு வருதல், பாரிவேட்டை ,தெப்பத் திருவிழா, மஞ்சள் நீராட்டு விழா, கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி போன்றவைகள் நடைபெறும். மேலும் விழாவின் இறுதியாக மகா அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறவிருக்கிறது.

Categories

Tech |