Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஏரிக்கரையிலும் பதுக்க முயற்சி…. மடக்கிய குற்றபுலனாய்வு அதிகாரிகள்…. ஆம்னி வேனுடன் பறிமுதல்….!!

ஏரிக்கரை அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைக்க முயன்ற நபரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள வீ.மேட்டூர் அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன்,  சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபு, போலீஸ் ஏட்டு கூத்தகவுண்டன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே ஒரு வேனில் இருந்து அரிசி மூட்டைகளை இறக்கி வைத்து கொண்டிருந்துள்ளார்.

இதனை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் குரும்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய ஆம்னி வேனில் சுமார் 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் சக்திவேளையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |