Categories
அரசியல் மாநில செய்திகள்

”யூடர்ன் அடித்து ஐக்கியமான புகழேந்தி”…… அதிர்ச்சியில் TTV தினகரன் ….!!

அமமுகவிலிருந்து விலகிய புகழேந்தி இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அமமுகவிலிருந்து விலகிய புகழேந்தி இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் தாய்க் கழகத்தில் மீண்டும் இணைந்தோம். இவ்வளவு நாட்களாக கூவம் ஆற்றில் இருந்தோம். அங்கிருந்து நாற்றம் தாங்க முடியாமல் வெளியே வந்து இங்கு இணைந்தோம்.

நடைபெறும் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெறும். வரக்கூடிய தேர்தலில் தினகரன் ஓர் இடம் கூட வெற்றிபெற முடியாது. இது அவருக்கு நான் விடுக்கும் சவால். அமமுகவில் கட்சி நடத்தும் தகுதி யாரிடமும் கிடையாது. தினகரன் அவரது குடும்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். கட்சி ஆரம்பித்த அன்றே தினகரன் வீழ்ந்துவிட்டார்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து கடும் கருத்துகளை தெரிவித்து இருந்தேன். அதை மறுக்கவில்லை. இருப்பினும், அவர்கள் எங்களை நல்ல முறையில் உறவினர்கள் போல் வரவேற்றனர் ‘ என்றார்.

Categories

Tech |