ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் அல்வா கிண்டி பரிமாறியது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில், ஜெயலலிதாவின் 74 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க வினர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது பிறந்தநாள் விழாவிற்காக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு சமையல் செய்பவர்கள் உடன் இணைந்து முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குடும்பத்தினருடன் அன்னதானத்திற்கு உணவு சமைத்தார். அதுமட்டுமல்லாமல் அல்வா கிண்டி பொது மக்களுக்கு வழங்கியுள்ளார். முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சமையல் செய்து அவரை பரிமாறியது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.