இயக்குனர் சங்க தேர்தலுக்காக ஒருவரை ஒருவர் காயம்படுத்தும்படி பேச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட பார்த்திபன்.
தமிழ்நாட்டில் வரும் 27-ஆம் தேதி திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலானது நடைபெற இருக்கின்றது. இத்தேர்தலில் ஆர்.கே.செல்வமணியின் அணியும் பாக்கியராஜின் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றது. இத்தேர்தலினால் இரு அணிகளும் ஒருவரை ஒருவர் முரண்பாடாக பேசி வருகின்றனர். இந்நிலையில் பாக்கியராஜ் அணியில் போட்டியிடும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார்.
பங்கம் இன்றி,
அங்கம் வகித்து,???
சங்கம் வளர்ப்பது எப்படி?
பேனா முள் கூட
பேப்பரை குத்திக் கிழிக்காத
சாக்கிறதையுடன் பதிவிடுவது
எப்படி? மற்றபடி இது ஒரு
குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே!!!https://t.co/9OLXkcbOsg— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 24, 2022
அப்பதிவில் தனது குரு பாக்கியராஜிக்கு நன்றி எனவும் எதிரணித் தலைவர் ஆர்.கே.செல்வமணிக்கு வணக்கம் எனவும் தெரிவித்திருக்கின்றார். 27 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்காக ஒருவரை ஒருவர் சரமாரியாக திட்டிக் கொள்வது நல்லது இல்லை. தேர்தலுக்குப் பின்னர் அனைவரும் நன்றாக பேசிக் கொள்ள போகிறோம். அதனால் தற்போது இப்படி செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.