Categories
சினிமா

அஜித்தின் வலிமை…. “திரையரங்கில் ஏற்பட்ட பிரச்சனை”…. வெடிகுண்டு வைக்க முயற்சி…. நாமக்கல்லில் பரபரப்பு….!!!!

நேற்று வலிமை திரைப்படத்தின் 4 மணி காட்சி வெளியாகாததால் வெடிகுண்டு வைக்க முயற்சி செய்த ரசிகரை போலீசார் தடுத்தனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் திரைப்படமான வலிமை நேற்று திரையரங்கில் வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மேலும் சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் நாமக்கலில் உள்ள திரையரங்கு ஒன்றில் 4 மணிக்கு ஒளிபரப்பாகும் முதல் காட்சியை வெளியிட  தாமதமானதால் ரசிகர் ஒருவர் தியேட்டரின் கதவின் மீது வெடிகுண்டு வைக்க முயன்றபோது போலீசார் பார்த்துள்ளனர். மேலும் போலீசார் அதனை கைப்பற்றினர். இதனால் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |