Categories
சினிமா

நண்பர்களை எதற்காகவும் விட்டுக்கொடுக்காத கமல்ஹாசன்…. அவர்களைப் பற்றி ஒரு பார்வை….!!!

கமல்ஹாசனை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காத நண்பர்கள் மூவரை பற்றி பார்க்கலாம்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் திரைப்படங்கள் மற்றும் அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகின்றார். மேலும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸில் தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் தன் நண்பர்களை எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார். ஆரம்ப காலத்திலிருந்து தற்போது வரை விட்டுக்கொடுக்காத மூன்று நண்பர்களை பற்றி நாம் பார்ப்போம்.

சந்தான பாரதி: இவரும் கமல்ஹாசனும் ஆரம்பபள்ளி காலங்களில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் ஆவர். கமல்ஹாசன் தன் மனைவியை பிரிந்த பிறகு அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சந்தான பாரதி. பல திரைப்படங்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றி இருக்கின்றனர். அண்மையில் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது கமல்ஹாசன் சந்தானபாரதி கனகராஜ் உள்ளிட்டோர் எடுத்த புகைப்படமானது வைரலாகியது.

நாசர்: இவர் தமிழ் திரைப்படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நாசர் “கதாநாயகன்” திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும்போது தடுமாற்றம் ஏற்பட்டது. அப்போது நாசருக்கு கமல்ஹாசன் தைரியம் கொடுத்தார். இந்நிகழ்வில் இருந்து இவர்களின் நட்பு ஆரம்பமானது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் தயாரித்து நாசர் ஹீரோவாக நடித்த திரைப்படம் மகளிர் மட்டும். பின்னர் இவர்கள் இருவரும் உத்தம வில்லன், தேவர் மகன் உள்ளிட்ட திரைப்படங்களில் சேர்ந்து நடித்தனர்.

ரமேஷ் அரவிந்த்: தமிழ் சினிமா உலகில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் ரமேஷ் அரவிந்த். இவரும் கமல்ஹாசனும் பஞ்சதந்திரம், சதிலீலாவதி உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவரின் இயக்கத்தில் உத்தம வில்லன் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். மேலும் இக்கதையை கமல்ஹாசனே எழுதி இருந்தார். ரமேஷ் அரவிந்த் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது கமல்ஹாசன் பக்கபலமாக இருந்துள்ளார்.

 

Categories

Tech |