போனி கபூர் தன் காதல் மனைவி ஸ்ரீதேவி நினைவு நாளான இன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.
நடிகர் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள வலிமை படம் இன்று தியேட்டர்களில் மிக பிரமாண்டமான முறையில் வெளியானது. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சென்னையில் இருக்கும் ரோகிணி தியேட்டரில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை எஃப் டி, எஃப்.எஸ்.ஸை ரசிகர்களுடன் சேர்ந்து ரசித்து பார்த்திருக்கிறார்.
மேலும் இன்று போனி கபூருக்கு துக்கமான நாள், ஏனென்றால் இன்று அவரது காதல் மனைவி ஸ்ரீதேவியின் நினைவு நாள் நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய மொழி படங்களை தயாரிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார்.
அதிலும் குறிப்பாக அவருக்கு பிடித்த நடிகர் அஜித்குமாரின் படத்தை தயாரிக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீதேவி நினைவு நாளில் போனி கபூர் சென்னைக்கு வந்து பூஜை செய்வாராம். எனவே ஸ்ரீதேவி நினைவு நாளிலேயே வலிமை படத்தை ரிலீஸ் செய்த போனிகபூர், அவரது ஆசையை, தான் நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளார்.