இந்தியாவின் முக்கிய ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இது மத்திய மாநில அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு மிகவும் அவசியமாகும். இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை ஆதார் அமைச்சகத்தின் மூலம் வழங்கப்படுகிறது. ஆதார் கார்டு எல்லா நேரங்களிலும் நம் கைவசம் வைத்திருப்பது அவசியமாகும். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து நிலைகளுக்கும் ஆதார் மிகவும் முக்கியமாகிறது. இந்நிலையில் ஆதாரில் உள்ள விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்வது முக்கியமாகும்.
இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் ஆதார் கார்டில் பிறந்த தேதி மாற்றம் முகவரி மாற்றம், மொபைல் நம்பர் இணைத்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி முகாமில் புதிதாக ஆதார் எடுக்க கட்டணம் கிடையாது. மேலும் தகவல் அறிய அருகிலுள்ள அஞ்சல் ஆதார் சேவை மையம் அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம்.