வலிமை திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனா நிலையில் அஜித்தின் ரசிகர்கள் அவரை கொண்டாடும் பெயரில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டனர்.
வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. வலிமை படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அடுத்த வாரத்திற்கும் சேர்த்து கடந்த வாரமே தீர்ந்து விட்டது. மேலும் வலிமை படத்துன் ரிலீஸை அஜித் ரசிர்கள் திருவிழாவை போல் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் சாலைகளிலும் திரையரங்க வாயில்களிலும் அநாகரிக செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளனர். சாலையில் சென்ற பால் லாரியில் இருந்து அஜித் ரசிகர்கள் பால் பாக்கெட்டுகளை திருடிய வீடியோக்கள் வெளியானது. மேலும் பால் பாக்கெட்டுகளை சாலையில் ஊற்றியும், சாலையில் சென்றவர்கள் மீது பீய்ச்சியடித்தும் அட்டகாசம் செய்தனனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் வாட்டர் கேன்களையும் திருடி நாசம் செய்துள்ளனர். மேலும் சாலையில் சென்ற தண்ணீர் லாரியையும் திறந்துவிட்டு ஒட்டு மொத்த தண்ணீரையும் வீணாக்கி உள்ளனர் அஜித் ரசிகர்கள். இதனை அடுத்து பேருந்துகளின் மீது ஏறி நடனமாடி கத்தியுள்ளனர். இந்த அநாகரிக செயல் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தவர் அஜித். எந்த விவகாரத்திலும் தலையிடமால் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார். ஆனால் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு நடந்து கொள்வது அஜித்தின் பெயரையும் கெடுக்கிறது.