Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் படம் வலிமை…. “படத்தில் இது மட்டும்தான் குறையாம்”…. அதை மட்டும் தவிர்த்து இருக்கலாம் அஜித்…!!!

அஜித் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. போனிகபூர் இயக்கத்தில் இப்படம் தயாராகியுள்ளது. இதில் அஜித்துக்கு சவால் விடும் வில்லனாக கார்த்திகேயா நடித்து உள்ளார். இயக்குனர் வினோத் இப்படத்தை இரண்டு ஆண்டுகளாக பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் என தான் கூறவேண்டும். வலிமை  வினோத் அவரின் சொந்த கதை என்பதால் மிகவும் மெனக்கெட்டு இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையில் கொரோனா, படப்பிடிப்பை  பெரிதும் பாதித்தது.  இருப்பினும் ஒருவழியாக படப்பிடிப்பை நிறைவு செய்தனர் . பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இப்படம் வெளியாகி உள்ளது. அனைவரும் படம் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டதாகவும் மேலும் வலிமை படம் மிகப்பெரிய வெற்றியை தரும் எனவும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சிலர் இப்படத்தின் run-time சற்று அதிகமாக உள்ளது எனவும் கருத்து தெரிவித்ததுள்ளனர்.  ஒரு படம் இரண்டு மணி நேரத்தை தாண்டி ஓடினால் இன்னும் கொஞ்சம் குறைத்து இருக்கலாம் என கூறுகின்றனர்.  அஜித்தின் வலிமை படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுகிறது. என்னதான் மிக சிறப்பாக இருந்தாலும் சற்று அளவை குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என சிலர் கூறுகின்றனர்.

Categories

Tech |