மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினத்தில் நடிகர் அஜித்தின் வலிமை படமும், இறந்த தினம் அன்று பாடலும் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24-ஆம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினால் முதல் நாள் முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வலிமை படத்திற்காக அஜித் ரசிகர்கள் பல திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியுள்ளனர். அதிகாலை காட்சிக்காக திரையரங்கில் இரவிலிருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர். பட்டாசு வெடித்து, பாடல்களை ஒளிபரப்பி பண்டிகையைப்போல் கொண்டாடினர்.
இந்நிலையில் இன்றைய தினம் மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்க்கு முன் ஜெயலலிதா இறந்த தினம் அன்று இப்படத்தில் இருந்து அம்மா பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இதெல்லாம் நடிகர் அஜித் ஜெயலலிதா மீதுள்ள மரியாதை காரணமாக தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகினர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கே வலிமை படத்தின் முதல் காட்சி துவங்கபட்டுள்ளது.