
இந்நிலையில், சமுத்திரக்கனி மேலும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் “கப்சா” படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடிக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 7 மொழிகளில் உருவாக்கப்பட உள்ளது. இப்படம் யஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கே.ஜி.எஃப் படத்தை போன்று பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.