Categories
தேசிய செய்திகள்

உஷார் மக்களே…! ஏமாந்துறாதீங்க…. பான் கார்டு வைத்து மோசடி…. RBI முக்கிய எச்சரிக்கை…!!!

இந்தியாவில் புது இன்ஸ்டன்ட் லோன் எனப்படும் உடனடி கடன்கள் பெறுவதற்கு மொபைல் ஆப்கள் மூலம் ஏமாறுபவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரித்து வருகின்றது.

மக்கள் அனைவருக்குமே பணத்தேவை அதிகமாக இருக்கிறது. இதனால் வாங்கும் சம்பளத்திலேயே அதை சமாளித்து கொள்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்பவர்கள் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வாங்கிய கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குகிறார்கள். இதுபோன்ற காரணங்கள் ஏராளமாக உள்ளது. தற்போது வங்கி கிளையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கிளிக் செய்தாலே சில நிமிடங்களில் வங்கி கணக்கில் பணம் வெந்து விடும். இந்தியாவில் புது இன்ஸ்டன்ட் லோன் எனப்படும் உடனடி கடன்கள் பிரபலமாக உள்ளது. மேலும் பண தேவை உள்ளவர்கள் இதுபோன்ற கடன்கள் பெறுவதற்கு அதிகமாக முயற்சிக்கின்றனர்.

இதற்கென நிறைய மொபைல் ஆப்கள் தற்பொழுது வந்துவிட்டது. இந்த மொபைல் ஆப்கள் அதிகாரபூர்வமாமானது தானா என்று கூட சிலர் பார்க்காமல் அதன் மூலம் கடன் வாங்குகின்றனர். இதில் பெரிய பிரச்சினை இருப்பது பெரும்பாலும் தெரிவதில்லை. பிரச்சனை வந்த பிறகுதான் உண்மை நிலவரம் தெரியவருகின்றது. இந்நிலையில் ‘தானி’ என்ற மொபைல் ஆப் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதன் மூலம் கடன் வாங்கிய நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் பான் கார்டு விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. சன்னிலியோன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது பான் கார்டை வைத்து வேறு யாரோ கடன் வாங்கியதாகவும் சமூக ஊடங்களில் வதந்திகளை பரப்புகின்றனர். இதுபோன்ற மொபைல் ஆப்கள் மீது மக்களுக்கு அச்சம் ஏற்பட துவங்கியுள்ளது.

மேலும் கடன் வாங்குவதற்கு மட்டுமல்லாமல் சிபில் ஸ்கோர் பற்றி தெரிந்து கொள்வதற்கும் பல்வேறு வெப்சைட்டில் இன்னும் முன்பின் தெரியாத மொபைல்களிலும் மக்கள் தங்களுடைய பான் கார்டு மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களை கொடுக்கின்றனர். இது பின்வரும் நாட்களில் பெரிய பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இது போன்ற ஆப்களை பயன்படுத்தும் போது கவனமுடன் இருக்குமாறு ரிசர்வ் வங்கியும் மற்ற வங்கிகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றது. ஆனாலும் பணத்தேவை அதிகமாகி கொண்டு போவது போலவே இதில் ஏமாறும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Categories

Tech |