Categories
சினிமா

அடேங்கப்பா….! “இவ்வளவு கோடியில் பங்களாவா”?…. இதற்காக தண்ணியாக செலவு செய்யும் தனுஷ்…!!!

நடிகர் தனுஷ் தற்போது போயஸ் கார்டனில் 300 கோடி மதிப்பிலான பங்களாவை  கட்டி வருகின்றார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தன் பேரன்களான யாத்ரா மற்றும் லிங்கா உடன் அதிக நேரத்தை கழிக்க வேண்டும் என்பதற்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை போயஸ் கார்டனில் வந்து தங்குமாறு கூறியிருக்கின்றார். இதனை தொடர்ந்து ரஜினியின் வீட்டிற்கு அருகாமையிலேயே தனுஷ் 2021ஆம் ஆண்டு நிலம் வாங்கி பூமி பூஜை செய்தார். 300 கோடி மதிப்பில் இந்த பங்களாவை கட்டி வருகின்றார் தனுஷ். வெங்கட் அட்லுரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்திலும் சேகர் கம்முலா இயக்கத்திலும் நடித்து வருகின்றார் தனுஷ்.

மேலும் இந்த இரண்டு திரைப்படத்திற்கும் தனுஷ் தலா 100 கோடி ரூபாய் சம்பளமாக ஒப்பந்தம் செய்து இருக்கின்றார். தன் சம்பளம் முழுவதைமே இந்த பங்களாவிற்காக செலவிட்டு  வருகின்றார் தனுஷ். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் சேர்ந்து வாழ்வதாக முடிவெடுத்து இருக்கின்றனர். ஆனால் இது நிலையானது அல்ல எனக் கூறப்படுகின்றது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனால் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சேர்த்து வைக்க முயற்சித்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |