Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு போட்ட அதிரடி ப்ளான்….!!!!

கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஓசூர் பகுதியில் தமிழக அரசு தொழிற்சாலைகளை அமைக்க 4,000 ஏக்கர் நிலம் வாங்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகரம் இந்தியர்களுக்கு பெரிய அளவில்  வேலைவாய்ப்பை வழங்கும் இடமாக இருந்து வருகிறது. இங்கு ஐ.டி நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதால் கர்நாடகத்திற்கு வருவாய் பெருகி வருகிறது. இந்நிலையில் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஓசூர் பகுதியில் தமிழக அரசு தொழிற்சாலைகளை அமைக்க 4000 ஏக்கர் நிலம் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே  சூளகிரியில் 1000 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள நிலையில், இப்போது மீண்டும் 3000 ஏக்கர் நிலம் வாங்க முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை ,கோயமுத்தூர் ஆகிய இடங்களில் மட்டுமே பெரிய அளவில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.டாடா மற்றும் ஓலா நிறுவனங்கள், டைட்டன், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஸ்ரீ வாரு மோட்டார், அதெர், சிம்பில் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் ஓசூரில் அமைந்துள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்கள் இங்கு வந்து தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழக அரசின் இந்த முடிவால் வருங்காலத்தில் சுமார் 25,000 கோடி முதலீட்டை ஈர்க்க முடியும். மேலும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |