தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைவார்களா என்பது குறித்து கே.ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக தனித்தனியாக இணையத்தில் அறிவித்தனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டுமென உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அறிந்த ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவின் மீது கோபம் கொண்டார்.
தந்தையின் கோபத்தால் ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் இணைந்து வாழும் மனநிலைக்கு மாறினார். ஆனால் தனுஷ் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எனக்கு இப்படி தனிமையாக இருப்பது பிடித்திருக்கின்றது. நான் இப்படியே இருந்து விடுகிறேன் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து ரஜினி இதுகுறித்து தனுஷிடம் பேசிய பொழுது ஐஸ்வர்யா போல் என்னால் முடிவை திடீரென மாற்றிக் கொள்ள முடியாது. எனக்கு சிறிது காலம் வேண்டும் எனக் கூறியிருக்கின்றார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரி ராஜாவின் நெருங்கிய தோழரான தயாரிப்பாளர் ராஜன், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இணைவார்களா என்பது பற்றி தன் கருத்தை கூறி இருக்கின்றார். ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் மனதால் சேர்ந்து வாழவில்லை என்றாலும் குழந்தைகளுக்காகவும் சமுதாயத்திற்காகவும் மீண்டும் இணைவார்கள் என கே ராஜன் கூறியிருக்கின்றார். இவர் ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணையப்போவதாக கூறும் செய்திக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.