Categories
சினிமா தமிழ் சினிமா

குஷ்புவிடம் சுந்தர்.சி கூறிய ஸ்பெஷலான விஷயம்….. புகைப்படத்துடன் குஷ்பு வெளியிட்ட பதிவு….!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் பின்னர் மார்க்கெட் குறைய அரசியலில் கவனத்தை செலுத்தினார். சில வருடங்களாக இவர் முழுநேர அரசியல்வாதியாக மாறி வருகிறார்.

மேலும், சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பல வருடங்களுக்கு முன் நடந்த விஷயம் குறித்து பதிவிட்டுள்ளார். அதன்படி பிப்ரவரி 22ஆம் தேதி 1995ம் ஆண்டு தான் குஷ்புவிடம் சுந்தர்.சி காதலை வெளிப்படுத்தினாராம். இதனை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |