கால்நடை சிறப்பு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவலூர் கிராமத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் உதவி இயக்குனர் பாண்டி, சண்முகநாதன், பிரக் ஆனந்தன், கால்நடை ஆய்வாளர் தயானந்த ராவ், முத்துக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சோலைமணி, முருகன், சாந்தி, ஊராட்சி தலைவர் திவ்வியா,முத்துக்குமார், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மலடு நீக்க சிகிச்சை, சினை ஊசி, சினைப் பரிசோதனை, போன்றவை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா முத்துக்குமார், துணைத்தலைவர் சங்கர், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கால்நடை வளர்ப்போருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளனர்.