Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவா..! உங்களுக்கு இவ்வளவு சம்பளம் குறைவா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 169 படத்திற்கு பாதிக்கு பாதியாக சம்பளத்தை குறைத்து 50 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிபில் தலைவர் 169 படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் 50 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தர்பார் படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்தப்படி வசூலிக்கவில்லை என கூறி விநியோகஸ்தர்கள் ரஜினி வீட்டின் முன்பு குவிந்தனர்.

இதையடுத்து அவர்களின் நஷ்டத்தை ஈடுகட்டினார் ரஜினி. அதன் தொடர்ச்சியாக அண்ணாத்த படத்திற்கு 80 ரூபாய் சம்பளம் மட்டுமே பெற்றார். ஆனால் அந்தப் படமும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை இந்நிலையில் தலைவர் 169 படத்திற்கு பாதிக்கு பாதியாக சம்பளத்தை 50 கோடி ரூபாயாக குறைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிக்கான ரசிகர்கள் குறைந்துள்ளதாகவும் அதனால் அவரது சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |