Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நீ புதிய தலைமுறையை வழிநடத்தும் ஜாம்பவான்”…. புகழ்ந்து தள்ளிய “யுவராஜ் சிங்”…. யாரன்னு தெரியுமா….?

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் 2 ஆம் நாள் தொடரில் விளையாடி அரைசதம் அடித்த கோலியை பாராட்டி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் தலைமையில் கடைசியாக இந்திய அணி தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆனால் அவரால் அதில் பெரிய அளவில் ஸ்கோர்களை எடுக்க முடியவில்லை. இதற்கிடையே ஒரு நாள், டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததையடுத்து அந்த அணிக்கான கேப்டன் பதவியிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

இதனையடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் நாள் டி20 தொடரில் கோலி பவுண்டரிகளை சரமாரியாக விளாச தொடங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து 2 ஆவது நாள் டி20 போட்டியில் கோலி கிளாசிக் ஷாட்களை ஆடி அரைசதம் அடித்துள்ளார். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கோலியை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதாவது கோலி, நீ கிரிக்கெட்டில் எப்படி வளர்ந்து வந்தாய் என்பதை அருகிலிருந்து நான் பார்த்துள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் குட்டி பையனாக வலம்வந்த நீ தற்போது புதிய தலைமுறையை வழி நடத்தும் ஜாம்பவனாக மாறிவிட்டாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |