Categories
மாநில செய்திகள்

50 லட்சமாவது பயனாளிக்கு வீடு தேடிச் சென்று மருத்துவப் பெட்டகம்…. முதல்வர் ஸ்டாலின்…!!

மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு தேடி சென்று மருத்துவ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 45 வயது அதற்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகளை வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குதல், அத்தியாவசிய மருந்து சேவைகளுக்கான பரிந்துரைகள், போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது பயனாளிக்கு வீடு தேடி சென்று மருத்துவ பெட்டகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

Categories

Tech |