Categories
மாநில செய்திகள்

எம்பிஏ நுழைவுத் தேர்வு…. மார்ச் 15 ஆம் தேதி வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

பொது மேலாண்மை படிப்பான எம்பிஏ-வில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கு மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள், மேலாண்மை பாடத்திற்கான எம்பிஏ முதுநிலை படிப்பில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமை வழியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. “சிமேட்” என்ற இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கி இருக்கிறது.

இத்தேர்வில் கலந்துகொள்ள இருப்பவர்கள் மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ-யின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் எம்.பி.ஏ., படிக்க விரும்பும் பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களை, cmat.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |