இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. ஏனெனில் வங்கிகளை காட்டிலும் இரண்டு மடங்கு லாபத்தை பெற முடிகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் இதில் அதிகளவில் இணைந்து வருகின்றனர். அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அஞ்சலகங்களில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மோசடிகளை குறைப்பதற்காக வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் சேமிப்பு கணக்குடன் செல்போன் எண் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும். அதோடு புதிய மொபைல் என்னை மாற்றினால் அதையும் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பணத்தை முதலீடு செய்த பணத்தை எடுத்தல், கடன் பெறுதல், கடனை திருப்பி செலுத்தல், கணக்கை முடித்துக் கொள்ளுதல்,போன்ற அனைத்து செயல்பாட்டிற்கும் மொபைல் எண் மற்றும் பான் எண் கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும்.
மேலும் 20,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை முதலீடு செய்தல் பணத்தை எடுத்தல், பரிவர்த்தனை செய்தல், உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் செல்போன் எண் சரிபார்க்கப்படும். ரூபாய் 50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது பான் எண் சரிபார்க்கப்படும். இதுவரை சேமிப்புதாரர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வில்லை என்றால் ஆன்லைன் மூலமாகSB-103/SB-7/7A/7B/ படிவத்தை பெற்று இணைத்து கொள்ளலாம்.