கர்நாடக மாநில சட்டப்பேரவையில் அமைச்சர்களுக்கு சட்டப்பேரவை சம்பளம், ஓய்வு ஊதியம் மற்றும் படிகள் திருத்த மசோதா-2022 நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் சட்டப்பேரவை கூட்டம் கூடியது. அதில் மாநில சட்டப்பேரவை, மற்றும் சம்பளம் ஓய்வூதியம் திருத்த மசோதா-2022 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஒரு ஆண்டிற்கு 60 கோடி ரூபாய் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.
மேலும் புதிய மசோதா மூலம் அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் போன்றோரின் சம்பளம் உயரும். இதற்கிடையில் ஹிஜாப் விவகாரம் மாநிலம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் காவிக்கொடி தேசிய கொடியாக மாறும் என கூறிய கர்நாடக பா.ஜ.க அமைச்சர் ஈஸ்வரனுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் பதவி விலகக் கோரியும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமலில் ஈடுபட்டு வருகின்றனர்.