பெண்ணை கற்பழிக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் தெற்கு தெருவில் பவித்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோடி விநாயக நல்லூரை சேர்ந்த 45 வயது பெண் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் என்ஜின் இயங்காததால் அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த பவித்திரனை அந்த பெண் உதவிக்கு அழைத்துள்ளார்.
அங்கு உதவி செய்வதற்காக சென்ற பவித்திரன் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளார். இதனால் அந்தப் பெண்ணுக்கு கழுத்து மற்றும் உடம்பில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் பவித்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.