ராதா கல்யாண விழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் பெற்றுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள காவிரி கரை அருகே ராதா கல்யாண விழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் ராதா கல்யாண விழா நடைபெற்றுள்ளது. இதில் இசை நிகழ்ச்சிகள், நாம சங்கீர்த்தனம் மற்றும் பஜனை போன்றவை நடைபெற்றுள்ளன.
அதன்பின் ஆஞ்சநேயர் உற்சவத்துடன் ராதா கல்யாண விழா சிறப்பாக நிறைவுபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்துள்ளனர். இதனையடுத்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.