Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் செய்ய வேண்டும்” தூய்மை பணியாளர்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் தூய்மைப் பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 8 மணி நேரத்திற்கும் மேலாக பணியாளர்களை வேலையில் ஈடுபடுத்தக்கூடாது, மாதந்தோறும் பத்தாம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டமானது சி.ஐ.டி.யு சங்க நெல்லை மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |