இயற்பியலின் கொள்கையை பயன்படுத்தி யானை பள்ளத்திலிருந்து வனத்துறையினர் மீட்ட வீடியோ தற்போது வைரலாக பரவியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் மிதினாபுரத்தில் நேற்று நள்ளிரவு யானை ஒன்று பள்ளத்தில் விழுந்தது என வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து டி.எப்.ஓ சந்தீப் பெர்வால் மற்றும் ஏ.டி.எப்.ஓ க்கள் தலைமையில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்அதிகாலை 4:00 மணி அளவில் மீட்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து யானை பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது.
இதனை ஐஎப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மிதினாபுரத்தில் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்தது. இயற்பியலின் ஆர்க்கிமிடிஸ் கொள்கையைப் பயன்படுத்தி அந்த யானை மீட்பது” என கூறியுள்ளார். ஆர்க்கிமிடிஸ் கொள்கை என்பது “ஒரு திரவத்தில் மூழ்கியிருக்கும் உடலில்செலுத்தப்படும் மேல்நோக்கி மிதக்கும் விசையானது, இடம்பெயர்ந்த திரவத்தின் நிறை மையத்தில் உடல் இடம்பெயர்ந்து மேல்நோக்கிச் செயல்படும் திரவத்தின் எடைக்குச் சமம்.”
மேலும் நேற்று வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. 7,900 கும் அதிகமான லைக்குகள் குவிந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் பல்வேறு வகையான கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர். மேலும் யானையை காப்பாற்றியதற்காக மீட்புக் குழுவினருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
An elephant fell into a ditch in Midinapur. Now how to rescue it. By applying Archimedes' principle. Watch to believe. pic.twitter.com/1mPs3v8VjC
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 21, 2022