இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகமான விஆர் வனிதா 6 ஒருநாள், 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.தற்போது 31 வயதாகும் விஆர் வனிதா அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில் ,”19 ஆண்டுகளுக்கு முன் நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது விளையாட்டை விரும்பும் சிறுமியாக இருந்தேன். அதேபோல் இன்றும் கிரிக்கெட் மீதான என் காதல் அப்படியே இருக்கிறது.
மாறுவது திசைதான். விளையாட்டை தொடருங்கள் என்று என் இதயம் சொல்கிறது.ஆனால் என்னுடைய உடல் சொல்வதை நிறுத்து என்று சொல்கிறது.என் காலணிகளைத் தொங்கவிட நேரம் வந்துவிட்டது .இதனால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.