இஸ்ரேல் அரசு, அதிநவீன கடற்படை வான் பாதுகாப்பு அமைப்பிற்கான சோதனை, வெற்றிகரமாக நடந்ததாக அறிவித்திருக்கிறது.
இஸ்ரேல், காசாவிலிருந்து ஹமாஸ் படையினரின் ராக்கெட் தாக்குதலை தடுப்பதற்காக, ‘அயர்ன் டோம்’ என்னும் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் நவீன அம்சங்களுடையதாக இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது.
இது பற்றி இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருப்பதாவது, பிராந்தியத்தில் ஈரான் ஆதரவுடன் இயங்கும் படைகளை எதிர்த்து செயல்படுவதற்கும், அவர்களது தாக்குதலிலிருந்து தங்களை பாதுகாப்பதற்காகவும் நாங்கள் ஏற்படுத்தி வரும் பலமுனை பாதுகாப்பு அம்சங்களினுடைய ஒரு பகுதியாக இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.