Categories
மாநில செய்திகள்

வி.ஐ.பி வேட்பாளர் விஜயலட்சுமி மீது வழக்குப்பதிவு… பெரும் பரபரப்பு.!!

சென்னை அம்பத்தூர் 90 வது வார்டில் பா.ஜ.க சார்பில் நடிகை விஜயலட்சுமி திமுக சார்பில் ராஜகோபால் மற்றும் அதிமுக சார்பில் அய்யனார் போன்ற தேர்தலில் போட்டியிட்டனர். இதில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த எந்திரத்தை  மாநகராட்சி அலுவலர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர். அப்போது எந்திரத்தை மாற்றி கள்ள ஓட்டு போட முயற்சி செய்வதாக பா.ஜ.க வேட்பாளர் ஜெயலட்சுமி, பா.ஜ.கவினர் சிலர் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக பா.ஜ.க வேட்பாளர் ஜெயலட்சுமி மற்றும் சில பேர் மீது அரசு உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாக கூடுதல், சிறை வைத்தல், கலகம் செய்யத் தூண்டுதல், பொது அமைதியை கெடுக்கும் வகையில் தூண்டுதல், உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |