தங்கம் விலை நேற்று குறைந்து இருந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நேற்று குறைந்து இருந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது . இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 35 ரூபாய் அதிகரித்து 4,762 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு சவரன் விலை 280 ரூபாய் அதிகரித்து 38,096 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து 1 கிராம் ரூ.64.40 விற்பனையாகிறது.