Categories
சினிமா தமிழ் சினிமா

“யார் பார்த்தால் எனக்கென்ன”…. வேணும்னே பண்ற தனுஷ்…. என்ன பண்ணாரு?…. நீங்களே பாருங்க….!!

நடிகர் தனுஷ் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த பலர் இவர் எதற்கும் துணிந்து விட்டார் என்று விமர்சித்து வருகின்றனர். 

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்து கொள்வதாக முடிவு செய்து தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிற திரைப்படம் ‘வாத்தி’. தற்போது ஹைதராபாத்தில் வாத்தி படத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஸ்டைலிஸ்டாக காவ்யா ஸ்ரீராம் வேலை செய்கிறார்.

நடிகர் தனுஷ் பிரபல ஹோட்டல் ஒன்றில் காவியா உடன் சேர்ந்து உணவருந்தி உள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வந்த நிலையில் தனுசுடன் சேர்ந்து உணவருந்திய அந்த பெண் யார் என்று அனைவரும் ஆராய்ச்சியில் இறங்கினர். நடிகர் தனுஷ் காவியா உடன் தான் சென்றால் இதெல்லாம் நடக்கும் என்று அவருக்கே தெரியும் ஆனாலும் தன் மனம் போல் தான் செய்வேன்.

அடுத்தவர்களுக்காக வாழ மாட்டேன் என்று இதையெல்லாம் செய்கிறார். இதனை  தொடர்ந்து இணையதளங்களில் நடிகர் தனுஷ் வேண்டுமென்றே இப்படி எல்லாம் செய்கிறார் என்று விமர்ச்சித்து வருகின்றனர். மேலும் பலர் இதையெல்லாம் பார்த்தால் சூப்பர் ஸ்டாரின் மனம் கவலைப்படாத என்று ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யாவும், தனுஷும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கான முயற்சியும் செய்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. நடிகர் தனுஷ் நான் சிங்கிளாக தான் இனி இருப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார்.

Categories

Tech |