திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 8.30 மணிக்கு கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் 4 மணி நேரம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். ஜெயக்குமார் தரப்பு ஜாமீன் மனு 23ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக நேற்று முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டபோதே அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த கைது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் திரு @offiofDJ அவர்கள் கள்ள ஓட்டு போட வந்தவரை விரட்டி பிடித்து முறையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தது தவறு என்று முதலமைச்சர் சொல்கிறாரா?திரு @mkstalin கள்ள ஓட்டு போடுவதை தூண்டினாரா?இதற்கு என்ன பதில் முதலமைச்சர் சொல்ல போகிறார்,அஇஅதிமுக சட்டரீதியாக எதையும் சந்திக்க தயார்! என பதிவிட்டுள்ளார்.