Categories
அரசியல் திருவாரூர் மாநில செய்திகள்

எந்த காலத்திலும் சிறுபான்மையினருக்கு பிரச்சனை வராது….. அதிமுக உறுதி….!!

நாட்டில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் கீழவீதியில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசை  உணவுத்துறை அமைச்சர் காமராஜர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்  என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்றார்.

மேலும் இந்த நாட்டில் இருக்கக்கூடிய எந்த சிறுபான்மையின மக்களுக்கு எந்த காலத்திலும் எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடக்கூடாது   என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |